ராஜபக்சேவுக்கு எதிராக கோஷமிட்டு சேலத்தில் இளைஞர் தீக்குளிப்பு!
ராஜபக்சேவின் வருகையை கண்டித்து சேலத்தில் இன்று அதிகாலை விஜயராஜ் என்ற தானி ஓட்டுனர் தீக்குளித்துள்ளார் என்ற செய்தி நம்மையெல்லாம் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
மீண்டும் ஒரு முத்துகுமரன், செங்கொடி தமிழகத்தில் வரக் கூடாது என்று நாம் விரும்பினாலும் இந்த தோழரின் உணர்வை நம்மால் புரிந்து கொள்ள முடியாமல் இல்லை. ஒரு இனப்படுகொலை செய்த அரக்கனை இந்திய நாடு வரவேற்பதை எந்த மானமுள்ள தமிழனும் விரும்ப மாட்டான். அவனை தடுக்க முடியவில்லையே என்ற ஆற்றாமையில் தான் விஜயராஜ் தீக்குளித்துள்ளார். இன்னும் அவரது உயிர் மருத்துவமனையில் ஊசலாடிக் கொண்டு இருக்கிறது. அவரின் உணர்வுக்கு தமிழர்கள் நாம் தலை வணங்குகிறோம்.
ஆனால் யாரும் இப்படியான முடிவை எடுக்கக் கூடாது என்பதே நம் விருப்பம். விஜயராஜ் அவர்களின் நிலைக்கு நம் ஆழ்ந்த வருத்தங்கள் .
தீக்குளிப்பை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுகொள்ள முடியாது, தயவுசெய்து இது போன்ற காரியங்களை செய்யாதீர்!!

No comments:
Post a Comment