Monday, September 17, 2012

ராஜபக்சேவுக்கு எதிராக கோஷமிட்டு சேலத்தில் இளைஞர் தீக்குளிப்பு!

ராஜபக்சேவுக்கு எதிராக கோஷமிட்டு சேலத்தில் இளைஞர் தீக்குளிப்பு!

ராஜபக்சேவின் வருகையை கண்டித்து சேலத்தில் இன்று அதிகாலை விஜயராஜ் என்ற தானி ஓட்டுனர் தீக்குளித்துள்ளார் என்ற செய்தி நம்மையெல்லாம் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.



மீண்டும் ஒரு முத்துகுமரன், செங்கொடி தமிழகத்தில் வரக் கூடாது என்று நாம் விரும்பினாலும் இந்த தோழரின் உணர்வை நம்மால் புரிந்து கொள்ள முடியாமல் இல்லை. ஒரு இனப்படுகொலை செய்த அரக்கனை இந்திய நாடு வரவேற்பதை எந்த மானமுள்ள தமிழனும் விரும்ப மாட்டான். அவனை தடுக்க முடியவில்லையே என்ற ஆற்றாமையில் தான் விஜயராஜ் தீக்குளித்துள்ளார். இன்னும் அவரது உயிர் மருத்துவமனையில் ஊசலாடிக் கொண்டு இருக்கிறது. அவரின் உணர்வுக்கு தமிழர்கள் நாம் தலை வணங்குகிறோம்.

ஆனால் யாரும் இப்படியான முடிவை எடுக்கக் கூடாது என்பதே நம் விருப்பம். விஜயராஜ் அவர்களின் நிலைக்கு நம் ஆழ்ந்த வருத்தங்கள் .

தீக்குளிப்பை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுகொள்ள முடியாது, தயவுசெய்து இது போன்ற காரியங்களை செய்யாதீர்!!

Saturday, September 8, 2012

வணக்கம் நேயர்களே...

காலையில் எழுந்ததுமே
செல்ஃபோனில் வந்திருந்த ஒரு மொக்கை ஜோக்கை
படித்துவிட்டு சிரிக்கும் இன்றைய
இளந்தலைமுறையினர்க்குத்
தெரிந்திருக்காது இந்த
'வணக்கம் நேயர்களே..' என்ற வார்த்தையில் இருந்த
ஓர் ஈர்ப்புத்தன்மையும்,
அந்த வார்த்தையின் சொந்தக்காரரின் வரலாறும்...


தென்கச்சி கோ.சுவாமிநாதன்..


அரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற
ஊரில் பிறந்த கோ. சுவாமிநாதன் சென்னை
மடிப்பாக்கத்தில் வசித்து வந்தார். வேளாண்மைப்
பட்டதாரி ஆவார்..

சென்னை வானொலியில் இன்று ஒரு தகவல் என்னும்
மிகப் பிரபலமான நிகழ்ச்சியை தொடர்ந்து பல ஆண்டுகள்
வழங்கியவர்
தென்கச்சி கோ.சுவாமிநாதன்...

அது ஒலிபரப்பான காலகட்டத்தில்
அதை கேட்காதவர்களே இல்லை என்ற அளவுக்கு,
அந்நிகழ்ச்சி புகழ் பெற்று விளங்கியது..

அதில்
தினம் தினம் புதுப்புது தகவல்களை சொல்வதுடன்,
அதற்கு முடிவாக ஒரு நகைச்சுவை கலந்த கதையையும்
கூறி இன்று ஒருத் தகவலை முடிப்பார்....

அவர்
தொகுத்து வழங்கும் விதம்‌‌ அவருக்கு ஏராளமான
ரசிகர்களை பெற்றுத் தந்தது..

முகம் அறியா குயிலின் நாதத்திற்கு நாம் மெய்
மறப்பது போல,
முகம் தெரியாத அந்த
காலக்கட்டத்திலேயே
தென்கச்சி கோ.சுவாமிநாதனுக்கு
ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்..

அவரது கதைகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள்
வரை அனைவரும் கேட்டு பயன்பெற்றனர்..

ஒவ்வொரு தகவலும்
ரத்தினச் சுருக்கமாகவும்,

கடைசியாகச் சொல்லும் கதை சிந்திக்க‌ வைப்பதாகவும்
இருக்கும்..
தினமும்‌ ஒரு தகவலைக் கூடத் தேடிவிடலாம்..
தினமும்‌ ஒரு கதையை எங்குதான் தேடுவாரோ என்று ஊரெல்லாம் ஆச்சரியப்பட்டுக்
கொண்டிருந்தனர்...!

சுவாமிநாதன்,
பிரபல எழுத்தாளராகவும்
விளங்கினார்..

அன்பின் வலிமை,
தீயோர் மற்றும்
அறிவுச்செல்வம்
உள்பட ஏராளமான
புத்தகங்களை தென்கச்சி கோ.சுவாமிநாதன்
எழுதியுள்ளார்..

1977-ம் ஆண்டில் அகில இந்திய வானொலி பணியில்
சேர்ந்த அவர்,
விவசாய நிகழ்ச்சி பிரிவு இயக்குனராக
நியமிக்கப்பட்டபோது,, 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி மூலம் வானொலி நேயர்களிடையே பிரபலமாக விளங்கினார்.
வீடும் வயலும் என்ற சிறப்பான
நிகழ்ச்சி மூலம் விவசாயத்துறையின்
மேம்பாட்டுக்கு பெரிதும் உதவிபுரிந்தார்..



இதுதவிர, குழந்தைகளுக்கான
ஏராளமான
நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்கியவர்
தென்கச்சி கோ.சுவாமிநாதன் என்பது குறிப்பிடத்தக்கது..

பின்னர்‌,
தொலைக்காட்சிகளிலும்
தோன்றி இன்று ஒரு தகவலை வழங்கி வந்தார்..

அவரது மறைவு வருங்கால சந்ததியினருக்கு பெரும்
இழப்பு என்றுதான் சொல்ல வேண்டும்..

நாம் அவரிடம்
கேட்ட
கதைகளை நினைவு‌ கூர்ந்து நமது பிள்ளைகளுக்கு‌
சொல்ல வேண்டியது நமது பொறுப்பு..
அவருக்கு செய்யும் சிறு‌ தொண்டாகவும் இதனைக்
கருதலாம்...

நன்றி : தமிழ் வளர்ப்போம்

Friday, September 7, 2012

தமிழ்நாட்டு நாட்டுப்புறங்களில் அண்மைய காலம் வரை, விளையாடப்பட்ட விளையாட்டுகளை அறிஞர் பெருமக்கள் பலர் தொகுத்து எழுதியுள்ளனர். அவற்றின் தொகுப்பாக இந்தக் கட்டுரையில் 200 விளையாட்டுகள் அகரவரிசையில் தொகுக்கப்பட்ட பின்னர் வகைப்படுத்தித் தரப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டு நாட்டுப்புறங்களில் அண்மைய காலம் வரை,
விளையாடப்பட்ட
விளையாட்டுகளை அறிஞர் பெருமக்கள் பலர்
தொகுத்து எழுதியுள்ளனர். அவற்றின் தொகுப்பாக
இந்தக் கட்டுரையில் 200 விளையாட்டுகள்
அகரவரிசையில் தொகுக்கப்பட்ட பின்னர்
வகைப்படுத்தித் தரப்பட்டுள்ளன.

சிறுவர் (பையன்கள்)
கைத்திறன்
கோலி விளையாட்டு
1. அச்சுப்பூட்டு
2. கிட்டிப்புள்
3. கோலி
4. குச்சி விளையாட்டு

(எல்லா வயதினரும், ஆண்
பெண் இருபாலாரும்)
5. குதிரைக் கல்லு
6. குதிரைச் சில்லி
7. சச்சைக்காய் சில்லி
8. சீச்சாங்கல்
9. தெல்லு (தெல்லுருட்டான்)
10. தெல்லு (தெல்லு எறிதல்)
11. பட்டம்
12. பந்து, பேய்ப்பந்து
13. பம்பரம்
14. மல்லு
15. வில்லுக்குச்சி

கால் திறன்
1. ஆனமானத் திரி
2. கரணப்பந்து
3. குதிரைக்குக் காணம் காட்டல்
4. கொக்கு விளையாட்டு
5. கோழிக்கால்
6. தை தக்கா தை
7. நடைவண்டி ஓட்டம்
8. நொண்டி
9. பச்சைக் குதிரை
10. பொய்க்கால் நடை, கொட்டாங்குச்சி நடை
11. மந்தி ஓட்டம்
12. மாட்டுக்கால் தாண்டல்
13. மூக்குப்பிடி (துரத்திப் பிடி)

அணி விளையாட்டு
1. ஓடுசிக்கு
2. சூ விளையாட்டு
3. நாடு பிரித்து
4. பந்து, பிள்ளையார் பந்து
5. பூச்சொல்லி
6. மதிலொட்டி
7. மந்திக் குஞ்சு
8. வண்டி உருட்டல்

குழு விளையாட்டு
1. அணில் பிள்ளை
2. ஆடும் ஓநாயும்
3. உயிர் கொடுத்து
4. கல்லுக்குச்சி
5. காக்கா கம்பு
6. காக்கா குஞ்சு
7. குச்சிக்கல்
8. குரங்கு விளையாட்டு
9. கோட்டான் கோட்டான்
10. கோழிக்குஞ்சு
11. தவளை விளையாட்டு
12. நாலுமூலைக் கல்
13. மரக்குரங்கு
14. வண்ணான் தாழி
15. வண்ணான் பொதி

நீர் விளையாட்டு
1. காயா பழமா
2. நீரில் தொடல்
3. நீரில் விழுதல்

கண்டுபிடி
1. உருண்டை திரண்டை
2. சீப்பு விற்கிறது

உல்லாசம்
1. ஊதல்
2. கால் தூக்கிற கணக்கப்பிள்ளை
3. சீத்தடி குஞ்சு
4. தோட்டம் (விளையாட்டு)
5. பஞ்சு வெட்டும் கம்போடா

சிறுமியர்
உடல்-திறன்
1. சில்லு (சில்லி)

கைத்திறன்
1. கல் பிடித்தல்
2. சுண்டு முத்து
3. தட்டாங்கல்

உல்லாசம்
1. இதென்ன மூட்டை
2. கிளி செத்துப்போச்சு
3. ஊதாமணி
4. என் உலக்கை குத்து குத்து
5. ஒருபத்தி இருபத்தி
6. ஒளிதல்
7. குச்சு குச்சு ரங்கம்மா
8. குறிஞ்சி வஞ்சி
9. கொடுக்கு
10. சிறுவீடு விளையாட்டு
11. சோத்துப்பானை (சோற்றுப்பானை)
12. ராட்டு பூட்டு
13. தவிட்டுக் குஞ்சு
14. பிஸ்ஸாலே பற
15. பூசனிக்காய் விளையாட்டு
16. பூப்பறி விளையாட்டு
17. பூப்பறிக்க வருகிறோம்
18. பூப்பூ புளியம்பூ
19. மச்சிலே யாரு
20. மத்தாடு
21. மோரு விளையாட்டு
22. வேடிக்கை விளையாட்டு

கலை விளையாட்டு
1. கும்மி

இருபால் இளைஞர்
உடல் திறன்
1. ஊதுமுத்து
2. உயிர் எழுப்பு
3. ஐந்து பந்து
4. எலியும் பூனையும்
5. கல் எடுத்தல்
6. கல்லா மண்ணா
7. கல்லுக் கொடுத்தான் கல்லே வா
8. குஞ்சு விளையாட்டு
9. குத்து விளையாட்டு
10. துரத்திப் பிடி
11. தூண் விளையாட்டு
12. தொடு விளையாட்டு
13. நாலு மூலை விளையாட்டு
14. நிலாப்பூச்சி
15. நெல்லிக்காய் (பாடித் தொடுதல்)
16. பாரிக்கோடு
17. புலியும் ஆடும்
18. மரங்கொத்தி
19. மல்லர் கம்பம்
20. மலையிலே தீப்பிடிக்குது
21. மாங்கொழுக்கட்டை

உல்லாசம்
1. ஊஞ்சல்
2. ஈசல் பிடித்தல்
3. உப்பு விற்றல்
4. ஒருகுடம் தண்ணி ஊத்தி – விளையாட்டு
5. கரகர வண்டி
6. கள்ளன் போலீஸ்
7. காற்றாடி
8. கிய்யா கிய்யா குருவி
9. கிழவி விளையாட்டு
10. கிறுகிறு மாம்பழம்
11. குலையா குலையா முந்திரிக்காய்
12. சங்கிலி விளையாட்டு
13. தட்டான் பிடித்தல்
14. தட்டை
15. நடிப்பு விளையாட்டு (தண்ணீர் சேந்துகிறது)
16. பந்து, எறிபந்து
17. பந்து, பிடிபந்து
18. பன்னீர்க்குளம் (விளையாட்டு)
19. பூக்குதிரை
20. வண்டி உருட்டல்

உத்தித் திறன்
1. உப்பு வைத்தல்
2. எண் விளையாட்டு
3. ஓடுகுஞ்சு
4. கண்ணாம்மூச்சி
5. கிச்சுக் கிச்சுத் தம்பலம்
6. கொப்பரை கொப்பரை
7. தந்தி போவுது தபால் போவுது
8. நிலாக் குப்பல்
9. பாக்குவெட்டியைக் காணோமே
10. மாது மாது

ஊழ்த்திறன் (திருவுளம்)
1. ஒற்றையா இரட்டையா
2. கண்கட்டி விளையாட்டு
3. மோதிரம் வைத்தல்
4. ராசா மந்திரி

பட்டவர் தெரிவு
1. ஓ… சிய்யான்
2. பருப்பு சட்டி (விளையாட்டு)
3. புகையிலைக் கட்டை உருட்டுதல்

காளையர்
1. அடிமுறை
2. இளவட்டக்கல்
3. கிளித்தட்டு
4. சடுகுடு (கபடி)
5. சல்லிக்கட்டு (பாய்ச்சல் காளை)
6. சிலம்பம்

கன்னியர்
1. அம்மானை
(ஒருவர் ஆடுவது சங்ககாலப்
பந்து விளையாட்டு. மூவர், ஐவர் எனக் கூடிப்
பாட்டுப்
பாடிக்கொண்டு அடுவது அம்மானை விளையாட்டு)

முதியோர்
1. ஆடுபுலி
2. ஓட்டம்
3. கட்ட விளையாட்டு
4. கைச்சில்லி
5.சூது தாயம்
6. தாயம்
7. திரிகுத்து
8. துரும்பு
9. நட்சத்திர விளையாட்டு
10. பரமபதம் (விளையாட்டு)
11. பல்லாங்குழி
12. முக்குழியாட்டம்

பாப்பா விளையாட்டு
1. அந்தக் கழுதை இந்தக் கழுதை
2. அய்யன் கொம்பு
3. அட்டலங்காய் புட்டலங்காய்
4. அத்தளி புத்தளி
5. உப்பு மூட்டை
6. கிள்ளாப் பறண்டடி
7. தட்டலங்காய் புட்டலங்காய்
8. தென்னைமரம் விளையாட்டு
(ஐலேலம் ஐலகப்பல்
விளையாட்டு)
9. நடைவண்டி
10. நான் வளர்த்த நாய்க்குட்டி
11. பருப்பு கடை (விளையாட்டு)

எல்லாரும் விளையாடும் விளையாட்டு..

கலை விளையாட்டு
1. கரகம்
2. கழியல்
3. கழைக்கூத்து
4. காவடி
5. கோக்கழிக் கட்டை
6. வர்மம்

தெய்வ ஆடல்கள்
மக்கள் ஆடல்கள்
விழா விளையாட்டு
1. உரிமரம்
2. உரியடி
3. கார்த்திகை விளக்கு
4. கார்த்திகைச் சுளுந்து
5. தைப்பாவை
6. பரணி பரணி
7. பாரி வேட்டை
8. பானை உடைத்தல்
9. புலியாட்டம்
10. பொம்மைச்சீட்டு
11. மஞ்சள் நீர் விளையாட்டு
12. மாட்டுப் பந்தயம்
13. மூணுகட்டை
14. மோடி விளையாட்டு

Photo: தமிழ்நாட்டு நாட்டுப்புறங்களில் அண்மைய காலம் வரை,
விளையாடப்பட்ட
விளையாட்டுகளை அறிஞர் பெருமக்கள் பலர்
தொகுத்து எழுதியுள்ளனர். அவற்றின் தொகுப்பாக
இந்தக் கட்டுரையில் 200 விளையாட்டுகள்
அகரவரிசையில் தொகுக்கப்பட்ட பின்னர்
வகைப்படுத்தித் தரப்பட்டுள்ளன.

சிறுவர் (பையன்கள்)
கைத்திறன்
கோலி விளையாட்டு
1. அச்சுப்பூட்டு
2. கிட்டிப்புள்
3. கோலி
4. குச்சி விளையாட்டு

(எல்லா வயதினரும், ஆண்
பெண் இருபாலாரும்)
5. குதிரைக் கல்லு
6. குதிரைச் சில்லி
7. சச்சைக்காய் சில்லி
8. சீச்சாங்கல்
9. தெல்லு (தெல்லுருட்டான்)
10. தெல்லு (தெல்லு எறிதல்)
11. பட்டம்
12. பந்து, பேய்ப்பந்து
13. பம்பரம்
14. மல்லு
15. வில்லுக்குச்சி

கால் திறன்
1. ஆனமானத் திரி
2. கரணப்பந்து
3. குதிரைக்குக் காணம் காட்டல்
4. கொக்கு விளையாட்டு
5. கோழிக்கால்
6. தை தக்கா தை
7. நடைவண்டி ஓட்டம்
8. நொண்டி
9. பச்சைக் குதிரை
10. பொய்க்கால் நடை, கொட்டாங்குச்சி நடை
11. மந்தி ஓட்டம்
12. மாட்டுக்கால் தாண்டல்
13. மூக்குப்பிடி (துரத்திப் பிடி)

அணி விளையாட்டு
1. ஓடுசிக்கு
2. சூ விளையாட்டு
3. நாடு பிரித்து
4. பந்து, பிள்ளையார் பந்து
5. பூச்சொல்லி
6. மதிலொட்டி
7. மந்திக் குஞ்சு
8. வண்டி உருட்டல்

குழு விளையாட்டு
1. அணில் பிள்ளை
2. ஆடும் ஓநாயும்
3. உயிர் கொடுத்து
4. கல்லுக்குச்சி
5. காக்கா கம்பு
6. காக்கா குஞ்சு
7. குச்சிக்கல்
8. குரங்கு விளையாட்டு
9. கோட்டான் கோட்டான்
10. கோழிக்குஞ்சு
11. தவளை விளையாட்டு
12. நாலுமூலைக் கல்
13. மரக்குரங்கு
14. வண்ணான் தாழி
15. வண்ணான் பொதி

நீர் விளையாட்டு
1. காயா பழமா
2. நீரில் தொடல்
3. நீரில் விழுதல்

கண்டுபிடி
1. உருண்டை திரண்டை
2. சீப்பு விற்கிறது

உல்லாசம்
1. ஊதல்
2. கால் தூக்கிற கணக்கப்பிள்ளை
3. சீத்தடி குஞ்சு
4. தோட்டம் (விளையாட்டு)
5. பஞ்சு வெட்டும் கம்போடா

சிறுமியர்
உடல்-திறன்
1. சில்லு (சில்லி)

கைத்திறன்
1. கல் பிடித்தல்
2. சுண்டு முத்து
3. தட்டாங்கல்

உல்லாசம்
1. இதென்ன மூட்டை
2. கிளி செத்துப்போச்சு
3. ஊதாமணி
4. என் உலக்கை குத்து குத்து
5. ஒருபத்தி இருபத்தி
6. ஒளிதல்
7. குச்சு குச்சு ரங்கம்மா
8. குறிஞ்சி வஞ்சி
9. கொடுக்கு
10. சிறுவீடு விளையாட்டு
11. சோத்துப்பானை (சோற்றுப்பானை)
12. ராட்டு பூட்டு
13. தவிட்டுக் குஞ்சு
14. பிஸ்ஸாலே பற
15. பூசனிக்காய் விளையாட்டு
16. பூப்பறி விளையாட்டு
17. பூப்பறிக்க வருகிறோம்
18. பூப்பூ புளியம்பூ
19. மச்சிலே யாரு
20. மத்தாடு
21. மோரு விளையாட்டு
22. வேடிக்கை விளையாட்டு

கலை விளையாட்டு
1. கும்மி

இருபால் இளைஞர்
உடல் திறன்
1. ஊதுமுத்து
2. உயிர் எழுப்பு
3. ஐந்து பந்து
4. எலியும் பூனையும்
5. கல் எடுத்தல்
6. கல்லா மண்ணா
7. கல்லுக் கொடுத்தான் கல்லே வா
8. குஞ்சு விளையாட்டு
9. குத்து விளையாட்டு
10. துரத்திப் பிடி
11. தூண் விளையாட்டு
12. தொடு விளையாட்டு
13. நாலு மூலை விளையாட்டு
14. நிலாப்பூச்சி
15. நெல்லிக்காய் (பாடித் தொடுதல்)
16. பாரிக்கோடு
17. புலியும் ஆடும்
18. மரங்கொத்தி
19. மல்லர் கம்பம்
20. மலையிலே தீப்பிடிக்குது
21. மாங்கொழுக்கட்டை

உல்லாசம்
1. ஊஞ்சல்
2. ஈசல் பிடித்தல்
3. உப்பு விற்றல்
4. ஒருகுடம் தண்ணி ஊத்தி – விளையாட்டு
5. கரகர வண்டி
6. கள்ளன் போலீஸ்
7. காற்றாடி
8. கிய்யா கிய்யா குருவி
9. கிழவி விளையாட்டு
10. கிறுகிறு மாம்பழம்
11. குலையா குலையா முந்திரிக்காய்
12. சங்கிலி விளையாட்டு
13. தட்டான் பிடித்தல்
14. தட்டை
15. நடிப்பு விளையாட்டு (தண்ணீர் சேந்துகிறது)
16. பந்து, எறிபந்து
17. பந்து, பிடிபந்து
18. பன்னீர்க்குளம் (விளையாட்டு)
19. பூக்குதிரை
20. வண்டி உருட்டல்

உத்தித் திறன்
1. உப்பு வைத்தல்
2. எண் விளையாட்டு
3. ஓடுகுஞ்சு
4. கண்ணாம்மூச்சி
5. கிச்சுக் கிச்சுத் தம்பலம்
6. கொப்பரை கொப்பரை
7. தந்தி போவுது தபால் போவுது
8. நிலாக் குப்பல்
9. பாக்குவெட்டியைக் காணோமே
10. மாது மாது

ஊழ்த்திறன் (திருவுளம்)
1. ஒற்றையா இரட்டையா
2. கண்கட்டி விளையாட்டு
3. மோதிரம் வைத்தல்
4. ராசா மந்திரி

பட்டவர் தெரிவு
1. ஓ… சிய்யான்
2. பருப்பு சட்டி (விளையாட்டு)
3. புகையிலைக் கட்டை உருட்டுதல்

காளையர்
1. அடிமுறை
2. இளவட்டக்கல்
3. கிளித்தட்டு
4. சடுகுடு (கபடி)
5. சல்லிக்கட்டு (பாய்ச்சல் காளை)
6. சிலம்பம்

கன்னியர்
1. அம்மானை
(ஒருவர் ஆடுவது சங்ககாலப்
பந்து விளையாட்டு. மூவர், ஐவர் எனக் கூடிப்
பாட்டுப்
பாடிக்கொண்டு அடுவது அம்மானை விளையாட்டு)

முதியோர்
1. ஆடுபுலி
2. ஓட்டம்
3. கட்ட விளையாட்டு
4. கைச்சில்லி
5.சூது தாயம்
6. தாயம்
7. திரிகுத்து
8. துரும்பு
9. நட்சத்திர விளையாட்டு
10. பரமபதம் (விளையாட்டு)
11. பல்லாங்குழி
12. முக்குழியாட்டம்

பாப்பா விளையாட்டு
1. அந்தக் கழுதை இந்தக் கழுதை
2. அய்யன் கொம்பு
3. அட்டலங்காய் புட்டலங்காய்
4. அத்தளி புத்தளி
5. உப்பு மூட்டை
6. கிள்ளாப் பறண்டடி
7. தட்டலங்காய் புட்டலங்காய்
8. தென்னைமரம் விளையாட்டு
(ஐலேலம் ஐலகப்பல்
விளையாட்டு)
9. நடைவண்டி
10. நான் வளர்த்த நாய்க்குட்டி
11. பருப்பு கடை (விளையாட்டு)

எல்லாரும் விளையாடும் விளையாட்டு..

கலை விளையாட்டு
1. கரகம்
2. கழியல்
3. கழைக்கூத்து
4. காவடி
5. கோக்கழிக் கட்டை
6. வர்மம்

தெய்வ ஆடல்கள்
மக்கள் ஆடல்கள்
விழா விளையாட்டு
1. உரிமரம்
2. உரியடி
3. கார்த்திகை விளக்கு
4. கார்த்திகைச் சுளுந்து
5. தைப்பாவை
6. பரணி பரணி
7. பாரி வேட்டை
8. பானை உடைத்தல்
9. புலியாட்டம்
10. பொம்மைச்சீட்டு
11. மஞ்சள் நீர் விளையாட்டு
12. மாட்டுப் பந்தயம்
13. மூணுகட்டை
14. மோடி விளையாட்டு

சொல் விளையாட்டு
1. கேலி
2. பூக்குதிரை
3. பூச்சொல்லி
4. மொழி விளையாட்டு
5. ரானா மூனா தண்டட்டி

என்ன மூச்சு முட்டுகிறதா..?
போய் தண்ணீர் குடித்துவிட்டு,
உங்கள் கணிப்பொறியில்
cricket, car race விளையாடுங்கள்..

நமது பாரம்பரிய விளையாட்டுகள் எப்படிப்போனால் நமக்கென்ன..?

அழுகை வருகிறது அன்பர்களே..!

சொல் விளையாட்டு
1. கேலி
2. பூக்குதிரை
3. பூச்சொல்லி
4. மொழி விளையாட்டு
5. ரானா மூனா தண்டட்டி

என்ன மூச்சு முட்டுகிறதா..?
போய் தண்ணீர் குடித்துவிட்டு,
உங்கள் கணிப்பொறியில்
cricket, car race விளையாடுங்கள்..

நமது பாரம்பரிய விளையாட்டுகள் எப்படிப்போனால் நமக்கென்ன..?

அழுகை வருகிறது அன்பர்களே..!

பிடிபட்டார், ஈமு கொள்ளை குருசாமி... விவசாயிகள் பணம் என்னவாகும்?

பிடிபட்டார், ஈமு கொள்ளை குருசாமி...
விவசாயிகள் பணம் என்னவாகும்?

ஈமு கோழி வளர்ப்பில் சுமார் 200 கோடி வரை மோசடி செய்ததாக , சுசி ஈமு பண்ணை அதிபர், குருசாமி நேற்று கைது செய்யப்பட்டார். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நாடு முழுக்க வலை வீசி தேடியத
ாக சொல்லப்பட்ட நிலையில், ஒகேனக்கல்லில் வைத்து தற்போது அவரை கைது செய்ததாக கூறியுள்ளது போலீஸ்!
Photo: பிடிபட்டார், ஈமு கொள்ளை குருசாமி...
விவசாயிகள் பணம் என்னவாகும்?

ஈமு கோழி வளர்ப்பில் சுமார் 200 கோடி வரை மோசடி செய்ததாக , சுசி ஈமு பண்ணை அதிபர், குருசாமி நேற்று கைது செய்யப்பட்டார். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நாடு முழுக்க வலை வீசி தேடியதாக சொல்லப்பட்ட நிலையில், ஒகேனக்கல்லில் வைத்து தற்போது அவரை கைது செய்ததாக கூறியுள்ளது போலீஸ்!

பாவம் போலீஸ்தான் என்ன செய்யும்..?
கணக்கில் காட்டப்பட்ட 200 கோடி, கணக்கில் வராத இன்னும் பல நூறு கோடிகள் என்று குருசாமி கொள்ளை அடித்தது மொத்தம் எத்தனை கோடியோ? அத்தனையையும் கணக்கு எடுத்து, எழுதி வாங்கி, கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை பங்கு பிரித்து கொடுத்து... பிறகு, பணம் கட்டி ஏமந்தவர்களில் IASக்கு வேண்டியவர், IPSக்கு வேண்டியவர், மந்திரிக்கு வேண்டியவர், மந்திரி மச்சானுக்கு வேண்டியவர் என சிலருடைய பணத்தையெல்லாம் பைசா பிரச்னை இல்லாமல் வங்கி கொடுத்து... தங்களுடைய அலைச்சல்களுக்கு நிவாரணமாக சில லட்சங்களை எடுத்துக்கொண்டு... அப்பப்பா ரொம்ப கஷ்டம்தான்

ம்ம்... இனி குருசாமியின் கணக்கில் 200 ரூபாய் இருப்பதே அதிகம். பணம் கட்டி பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு இதை பிரித்துக் கொடுத்துவிடுவார்கள்?! அடுத்த மாதமே குருசாமி வெளியே வந்துவிடுவார். இந்த நாடகமும் முடிந்து விடும்!



நன்றி ": pasumai vikadan
பாவம் போலீஸ்தான் என்ன செய்யும்..?
கணக்கில் காட்டப்பட்ட 200 கோடி, கணக்கில் வராத இன்னும் பல நூறு கோடிகள் என்று குருசாமி கொள்ளை அடித்தது மொத்தம் எத்தனை கோடியோ? அத்தனையையும் கணக்கு எடுத்து, எழுதி வாங்கி, கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை பங்கு பிரித்து கொடுத்து... பிறகு, பணம் கட்டி ஏமந்தவர்களில் IASக்கு வேண்டியவர், IPSக்கு வேண்டியவர், மந்திரிக்கு வேண்டியவர், மந்திரி மச்சானுக்கு வேண்டியவர் என சிலருடைய பணத்தையெல்லாம் பைசா பிரச்னை இல்லாமல் வங்கி கொடுத்து... தங்களுடைய அலைச்சல்களுக்கு நிவாரணமாக சில லட்சங்களை எடுத்துக்கொண்டு... அப்பப்பா ரொம்ப கஷ்டம்தான்

ம்ம்... இனி குருசாமியின் கணக்கில் 200 ரூபாய் இருப்பதே அதிகம். பணம் கட்டி பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு இதை பிரித்துக் கொடுத்துவிடுவார்கள்?! அடுத்த மாதமே குருசாமி வெளியே வந்துவிடுவார். இந்த நாடகமும் முடிந்து விடும்!
சிவகாசி அருகே முதலிப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட கோர வெடி விபத்தில் இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். ப‌ல‌ர் ‌தீ‌க்காய‌ங்களுட‌ன் மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். இதனா‌ல் மேலும் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்
சப்படுகிறது.

விருதநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டியில் உள்ளது ஓம் சக்தி பயர் ஒர்க்ஸ் நிறுவனம். அந்த நிறுவனத்தில் 40 அறைகளில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளும், பட்டாசுகளுக்கான வெடி பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன.

இந் நிலையில் இன்று பிற்பகலில் திடீர் என்று ஒரு அறையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறையே வெடித்து தரைமட்டமானது. அதிலிருந்து பரவிய தீ மளமளவென் அடுத்ததடுத்த அறைகளுக்கும் பரவியதில், அங்கிருந்த பட்டாசுகளும், வெடி மருந்துகளும் வெடித்துத் சிதறின.

இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெரும் சத்தத்துடன் அந்த தொழிற்சாலையே வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தது. இதனால் அந்த பகுதியில் புகை மண்டலமாக காட்சியளித்தது. அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறையினரும் வருவாய்த் துறையினரும், ஆம்புலன்ஸ்களும் அந்த தொழிற்சாலை அருகே கூட செல்ல முடியவில்லை. அவ்வளவு சக்தியோடு பெரும் சத்ததோடு வெடிப்புகள் நடந்தன. பட்டாசு ஆலையில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினரும் குழந்தைகளும் வெளியே நின்று கொண்டு தலையிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதனர். சுமார் 20 பேர் மயங்கி விழுந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

விருதுநகர், சிவகாசி, சாத்தூரில் இருந்து வந்த 10 தீயணைப்பு வண்டிகளும் 60க்கும் மேற்பட்ட வீரர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்துக்குப் பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.





Photo: சிவகாசி அருகே முதலிப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட கோர வெடி விபத்தில் இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். ப‌ல‌ர் ‌தீ‌க்காய‌ங்களுட‌ன் மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். இதனா‌ல் மேலும் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. 

விருதநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டியில் உள்ளது ஓம் சக்தி பயர் ஒர்க்ஸ் நிறுவனம். அந்த நிறுவனத்தில் 40 அறைகளில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளும், பட்டாசுகளுக்கான வெடி பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன.

இந் நிலையில் இன்று பிற்பகலில் திடீர் என்று ஒரு அறையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறையே வெடித்து தரைமட்டமானது. அதிலிருந்து பரவிய தீ மளமளவென் அடுத்ததடுத்த அறைகளுக்கும் பரவியதில், அங்கிருந்த பட்டாசுகளும், வெடி மருந்துகளும் வெடித்துத் சிதறின.

இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெரும் சத்தத்துடன் அந்த தொழிற்சாலையே வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தது. இதனால் அந்த பகுதியில் புகை மண்டலமாக காட்சியளித்தது. அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறையினரும் வருவாய்த் துறையினரும், ஆம்புலன்ஸ்களும் அந்த தொழிற்சாலை அருகே கூட செல்ல முடியவில்லை. அவ்வளவு சக்தியோடு பெரும் சத்ததோடு வெடிப்புகள் நடந்தன. பட்டாசு ஆலையில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினரும் குழந்தைகளும் வெளியே நின்று கொண்டு தலையிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதனர். சுமார் 20 பேர் மயங்கி விழுந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

விருதுநகர், சிவகாசி, சாத்தூரில் இருந்து வந்த 10 தீயணைப்பு வண்டிகளும் 60க்கும் மேற்பட்ட வீரர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்துக்குப் பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

விபத்தில் இதுவரை 56 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றச் சென்ற பலரும் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் விருதுநகர், சிவகாசி மருத்துவமனைகளிலும், பலத்த காயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை நெருக்கமாக படம் எடுக்கச் சென்ற ஜீ டிவியின் நிருபர் வைத்தி படுகாயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த தீ விபத்தில் அந்த ஆலையின் 40 அறைகளும் வெடித்துச் சிதறி தரைமட்டமாகிவிட்டன. இந் நிலையில் விபத்து நடந்த இடத்தைச் சுற்றி 3 கி.மீ. தூரத்துக்கு யாரும் செல்ல வேண்டாம் என தீயணைப்புத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

சிவகாசியில் நடந்த தீ விபத்துகளிலேயே இது தான் மிகவும் மோசமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

விபத்தில் இதுவரை 56 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றச் சென்ற பலரும் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் விருதுநகர், சிவகாசி மருத்துவமனைகளிலும், பலத்த காயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை நெருக்கமாக படம் எடுக்கச் சென்ற ஜீ டிவியின் நிருபர் வைத்தி படுகாயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த தீ விபத்தில் அந்த ஆலையின் 40 அறைகளும் வெடித்துச் சிதறி தரைமட்டமாகிவிட்டன. இந் நிலையில் விபத்து நடந்த இடத்தைச் சுற்றி 3 கி.மீ. தூரத்துக்கு யாரும் செல்ல வேண்டாம் என தீயணைப்புத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

சிவகாசியில் நடந்த தீ விபத்துகளிலேயே இது தான் மிகவும் மோசமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இ மெயில் கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா?தமிழன்டா


இ மெயில் கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா?தமிழன்டா


நியூயார்க்: இந்தியாவால் வெளியேற்றப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட தமிழ் விஞ்ஞானி சிவா அய்யாதுரையை வட அமெரிக்கத் தமிழர் பேரவையான பெட்னா சிறப்பித்து கவுரப்படுத்தியிருக்கிறது.
இப்போதெல்லாம் 'மெயில்' வந்துருக்கு ன்னு வீட்டிலே யாரும் சொன்னால் அது தபாலில் வந்த மெயில் என்ற எண்ணம் வருவதில்லை. 'மெயில்' என்றால் ‘இமெயில்' தான் என்று ஆகிவிட்டது. ஃபேஸ்புக், டுவிட்டர் என வெவ்வேறு பரிமாணங்களில் தகவல் தொழில் நுட்பம் முன்னேற்றம் கண்டாலும், இமெயில் எனபது அன்றாட செயல்களில் முக்கிய அம்சமாகிவிட்டது. தற்போதைய வாழ்க்கை முறையையே மாற்றிப் போட்டுவிட்டது.
முதன் முதலாக இமெயில் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஃப்ட்ஸ், மெமோ உள்ளிட்ட (Inbox, Outbox, Drafts, the Memo ("To:", "From:", "Subject:", "Bcc:", "Cc:", "Date:", "Body:"), and processes such as Forwarding, Broadcasting, Attachments, Registered Mail, and others.) அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய தகவல் பரிமாற்றத்தை கண்டு பிடித்தவர் அமெரிக்க நியூ ஜெர்ஸி மாகாணத்தில் வசித்து வந்த 14 வயதே நிரம்பிய வி.ஏ. சிவா அய்யாதுரை என்ற தமிழ்க் குடும்பத்தை சார்ந்த மாணவன்.
ஆனால், குடியேற்ற சிறுபான்மை இனத்தவர் என்ற காரணத்தினாலோ என்னவோ, அவருக்கு அந்த அங்கீகாரத்தை கொடுக்காமல், இமெயில் உரிமைக்கு பலரும் சொந்தம் கொண்டாடினர்.
நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்க அரசாங்கம், 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் நாள் முறையாக வி.ஏ. சிவா அய்யாதுரையின் புதிய கண்டுபிடிப்பான ‘இமெயில்' ஐ அங்கீகரித்து காப்பி ரைட் வழங்கியது. இன்றோடு சரியாக முப்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை ஒட்டி, டாக்டர். வி.ஏ. சிவா அய்யாதுரை 'இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ்' என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.





நியூ ஜெர்ஸி மாகாணம் நேவார்க் நகரில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் சார்பில், நேவார்க் நகர உயர் நிலைப்பள்ளி மாணவர்களை புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு லட்சம் டாலர்கள் பரிசுத்தொகை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார் டாக்டர் சிவா அய்யாதுரை.
மாணவனாக இருந்த போது தனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் பல்வேறு சோதனைகளுக்குள்ளான தன்னைப்போல், ஏனைய மாணவர்களுக்கு அந்த சோகம் நேரக்கூடாது என்பதற்காகவும், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் புதிய தொழில்களை தொடங்கும் வகையிலும் இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ் உறுதுணையாக இருக்கும் என்றார்.

பல தொழில்களை நடத்தி வரும் டாக்டர் சிவா அய்யாதுரை, அமெரிக்க பிரபல பல்கலைக் கழகமான எம்.ஐ.டி யின் விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார். சமீபத்தில் நடந்த வட அமெரிக்க தமிழர் பேரவை (ஃபெட்னா) வெள்ளிவிழா மாநாட்டில் அவர் கௌரவிக்கப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ‘இமெயில்' பயணத்தை http://www.inventorofemail.com/ தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் அவமதிப்பு
இதே சிவா அய்யாதுரையை மத்திய அரசின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 2008-ம் ஆண்டு டெல்லிக்கு அழைத்தது. அவரும் இந்திய அரசின் அழைப்பை ஏற்று டெல்லியில் வந்து பணியாற்றினார். ஆனால் மத்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத் தலைவரை விமர்சித்தார் என்று கூறி அவரை இதர விஞ்ஞானிகள் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அவருக்கான இணைய தொடர்பும் துண்டிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் அவர் தங்கியிருந்த அரசு வீட்டிலிருந்தே வெளியேறவும் உத்தரவிடப்பட்டது.
இப்படி இந்தியா அவமதித்த அய்யாதுரைதான் பெட்னா மாநாட்டில் சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்.

இன்றைக்கு உள்ளவர்கள் தமிழர்கள் தானா ..!?


இன்றைக்கு உள்ளவர்கள் தமிழர்கள் தானா ..!?

உலகில் மொழிகள் பிறக்கும் முன்னே இலக்கியம் படைத்த இனம், உலகில் நாகரீகம் தோன்றும் முன்னே வாழ்வை," அகம்,புறம் " என பிரித்த இனம், தான் எங்கு வாழ்கிறோம் என மற்றவர்கள் உணர்வதற்கு முன்னே , " குறுஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை" என்று உலகில் மொத்தம் ஐவகை நிலங்கள் தான் உள்ளது என உணர்த்திய இனம், மற்றவர்கள் காட்டுவாசிகளாய் திரிந்த போதே, ஆற்றுக்கு நடுவே அணை கட்டி
தண்ணீரை திருப்பி விவசாயம் செய்த இனம்,இப்போது படித்தாலும்,இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கழித்து படித்தாலும், எத்தனை கலாச்சாரங்கள் மாறினாலும் எந்த ஒரு மனிதனுக்கும் ஒத்துப்போகும் திருக்குறளை தந்த இனம்,எந்த சாட்டிலைட்டுகளும் இல்லாமல் " ஒன்பது " கோள்கள், என்று கணித்த இனம், மனித வியாதியை குணப்படுத்த இயற்கையிலயே எல்லா மருந்துகளும் உள்ளது என்று சித்த வயிதியத்தை கொடுத்த இனம்,தஞ்சை கோயில் எப்படி கட்டப்பட்டது என்று இன்று வரை அடித்து கூற முடியாத அளவிற்கு,கட்டிடக்கலையை கொடுத்த இனம்.இன்னும் ஆயிரம் ஆயிரம் விடயங்களை கூறிக்கொண்டே போகலாம். இப்பேற்பட்ட உயரிய சிறப்புகளை உடையது தான் தமிழினம்.



ஆனால் இன்றோ டாஸ்மாக் கடைகளை வீடாகிக்கொண்ட இனம் , ஊழல் செய்து விட்டு பெயிலில் வருபவனை வரவேற்கும் இனம் , தன்னுடைய சொந்த இனமே அழிவதை கண்டும் காணாமல் " ஐ.பி.ல்" பார்க்கும் இனம் ,பகுத்தறிவு என்ற பெயரில் பழையன எல்லாவற்றையும் அழிக்கும் இனம், தன் சொந்த மொழியை பேசினாலே இழிவாக பார்க்கும் இனம், தன் வரலாற்றையே மறந்து தறிகெட்டு ஓடிகொண்டிருக்கும் இனம், தன் முன்னோர்களின் சொத்துக்களை பாழ்படுத்திக்கொண்டிருக்கும் இனம், கவர்ச்சி நடிகைக்கு கோயில் கட்டும் இனம் , இலவசங்களை பெற்று உழைப்பை மறந்த இனம், எவ்வளவு கூறினாலும் அதை அடுத்த நிமிடத்திலேயே மறந்து விடும் இனம். இதற்கு முன் வாழ்ந்தவர்களின் வாழ்கையில் ஒரு விடயத்தில் கூட இன்றைக்கு ஒத்துப்போகாத நாம் உண்மையில் தமிழர்கள் தானா ?

‎"தமிழனை ஏமாளியாக்கும் புதுத் திட்டம் - கட்டாயம் படியுங்கள் பரப்புங்கள்"

‎"தமிழனை ஏமாளியாக்கும் புதுத் திட்டம் - கட்டாயம் படியுங்கள் பரப்புங்கள்"
இணையதள நண்பர்களே இது நீங்கள் கட்டாயமாக படிக்கவேண்டிய செய்தி… படித்துவிட்டு அனைத்து தமிழ் வாழ் நேசங்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்(Please SHARE or TAG Tamil friends). விழிப்புணர்வை தூண்டுங்கள்… நமக்கு உணவளிக்க நாள் முழுவதும் பாடுபடும் விவசாய மக்களுக்கு ஆதரவு தாருங்கள்…

புதுதிட்டம்:
நதிநீர், மின்சாரம், மீனவர் பாதுகாப்பு, அரசியல
் பிரதிநிதித்துவம் என்று எல்லாவற்றிலும் இரண்டாம்தர குடிமக்களாய் நடத்தப்படும் தமிழகத்தின் ஏமாளிதனத்தின் இன்னொரு அடையாளம் கெயில் (GAIL) காஸ் லைன் பதிப்பு திட்டம்.
கேரளா-கொச்சியில் இருந்து கர்நாடக-பெங்கலூருவிற்கு தமிழ்நாடு வழியாக காஸ்லைன் செல்கிறது. இதனால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிப்படைகின்றனர். காஸ் விற்பதால் வரிப்பயன்&வேலை பெறுவது கேரளா, அதை வாங்கி பயன்படுத்துவது கர்நாடகா இருந்தும் நம் நிலங்களுக்குள் பைப்லைன் வர காரணம் அம்மாநில விவசாயி/அரசு எதிர்பா? இல்லை தமிழர் என்ற இளக்காரமா..??

ஏழு மாவட்ட(!) விவசாய நிலங்களுக்குள் இந்த பைப் செல்வதால் அந்த நிலத்தில் விவசாய கட்டுப்பாடு வரும். அதாவது தண்ணீர் பாய்ச்சகூடாது; மழை பெய்தால் அதைக்கொண்டு பயிர் செய்யலாம்; உழுதல் கூடாது; மரம்,வீடு,ரோடு கூடாது. அந்த பைப்லைனுக்கு பாதிப்பென்றால் அந்த விவசாயிதான் பொறுப்பு! எப்படி நியாயம்?? இதற்கு அவர்கள் தரும் இழப்பீடு ஏக்கருக்கு ஆயிரம் ரூபாய்!






ஒரு வயதான விவசாயி, நில உரிமையாளர், நிலத்தில் அத்துமீறி நுழைந்து குழி பறிப்பதும் நிலம் அளப்பதும் கண்டு கேள்வி கேட்டவரை “திஹார் ஜெயிலுக்கு போறியா?? XXX, ஓடீறு..!!”. கூலிக்கு இருக்கும் ஒரு கடைநிலை ஊழியனுக்கே இவ்வளவு துணிச்சல் எனில் அந்த நிர்வாகத்துக்கு தமிழ்விவசாயி என்றால் எவ்வளவு அலட்சியம் கற்பிக்கபட்டிருக்கும்?
தமிழகம் வழியாக வரகூடாது என்ற கழுதை கோரிக்கை தேய்ந்து, ரயில் தட ஓரத்திலும், நெடுஞ்சாலை ஓரங்களிலும் கொண்டு செல்லுங்கள். விவாசயத்தை அழிக்காதீர்கள், விவசாயிகளுக்கான கட்டுபாடுகளை தளர்த்துங்கள் என்ற கட்டெறும்பு கோரிக்கை வைத்தாலும் ஏற்க மறுக்கிறார்கள். இவர்கள் சொல்லும் காரணம் தமிழகம் வழியாக வந்தால் 310கிமீ; கேரளா, மைசூரு வழியாக வந்தால் 470கிமீ. ஆனால் வரைபடத்தை பார்த்தால் எது குறைந்த தூரம் என்பது விளங்கும். அந்த பாதையைவிட தமிழக பாதையில் மலைகளும் வனப்பகுதியும் அதிகம்.

விவசாய நிலத்துக்குள்தான் ரோடு, ரயில், ரியல்எஸ்டேட், காஸ்லைன், தொழிற்சாலை அனைத்தும் வருமா? இதற்கான போராட்டம் வலுத்து வரும் நிலையில் அனைத்து தரப்பு மக்களும் ஆதரவளிக்க வேண்டும். எல்லா மாவட்ட விவசாயிகளும் வேறுபாடுகள் மறந்து ஓரணியில் நிற்க வேண்டும். இணைய தமிழர்களும் தங்கள் ஆதரவை காட்ட வேண்டும்.

Wednesday, September 5, 2012

உலகில் இருக்கும் ஒவ்வொரு அதிசயமும் விளங்க முடியாத இரகசியத்தை கொண்டுள்ளது.


உலகில் இருக்கும் ஒவ்வொரு அதிசயமும் விளங்க முடியாத இரகசியத்தை கொண்டுள்ளது.

பிரமிடுகள் தனக்குள் கொண்டிருக்கும் இரகசியத்திற்கு இன்னும் விடைகிடைக்கவே இல்லை. பிரமிடுகளில் மிகப்பெரிய பிரமிடான "கிஸா" பிரமிடு 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கல்லும் 2 முதல் ஒன்பது டன் வரை எடை கொண்டது. இந்த கற்களை எங்கிருந்து எப்படி இழுத்து வந்தார்கள்; ஒன்றின் மீது ஒன்றாக எப்படி ஏற்றினார்கள் என்பது இன்னும் மர்ம முடிச்சாகவே உள்ளது. இந்த அளவுக்கு கற்களை தோண்டி எடுத்தால் பிரமாண்டமான பள்ளங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் பலமைல் சுற்றளவிற்கு எந்த ஒரு பெரிய பள்ளமும் இல்லை.



இதைப் போலவே 1947 -க்கும் 1956-க்கும்இடைபட்ட காலத்தில் பாலஸ்தீனத்தின் மேற்கு பகுதியில் உள்ள கும்ராம் மலைக்குகையில் இருந்து 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான 900 ஆவணங்கள் கிடைத்தன.
மெல்லிய செப்பு தகடுகளில் எழுதப்பட்ட இவை சாக்கடல் சுருள்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஹீப்ரு மொழியில் எழுதப்பட்ட இந்த சுருள்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகசியம். தங்கப்புதையலுக்கான தகவல்கள். புதையல் கரிசிம் மலையில் இருக்கிறது என்கிறது ஒரு சுருள். ஆனால் கரிசிம் மலை எது என்பதுதான் யாருக்கும் விடைதெரியாத வினா.
இலக்கியமும், சினிமா பாடல்களும், வரலாறும் அலசி காயப்போட்ட Ôபாபிலோனின் தொங்கும் தோட்டம்Õ எங்கே இருக்கிறது? என்பதே ஒரு ரகசியம்தான். கி.மு. 4 00- ல் பெரோசஸ் என்பவர்தான் முதன்முதலாக பாபிலோன் தொங்கும் தோட்டம் பற்றி எழுதினார். பாக்தாத்துக்கு பக்கத்தில் கி.மு.6 00-ம் வருடங்களில் உருவாக்கப்பட்டது என்பது சிலருடைய கருத்து. சமீபத்தில் யூப்ரிடிஸ் நதியருகே 75 அடி அகல சுவரை கண்டு பிடித்திருக்கிறார்கள். இது தொங்கும் தோட்டமாக இருக்கலாம் என்று சிலர் நம்பிக்கையாக தெரிவிக்கிறார்கள்.

உலகில் உள்ள மலைகளிலேயே மிகவும் பணக்கார மலை எதுவென்றால் அது ஆல்ப்ஸ் மலைதான். காரணம் ஹிட்லர் இரண்டாம் உலகப்போரின் போது எதிரிகளுக்கு பயந்து, தான் வைத்திருந்த பிளாட்டினம், தங்கம், வெள்ளி முதலியவற்றை அள்ளி ஆல்ப்ஸ் மலையில் ஒளித்து வைத்திருப்பதாக நம்பி மலையெங்கும் அலைந்து திரிந்தது அமெரிக்கப்படை. கடைசியாக ஒரு புதையலை கண்டுபிடித்தது. அதுவே பல ஆயிரம் கோடி ரூபாய் பெறுமானம் கொண்டது. அன்றிலிருந்து மக்கள் கூட்டம் எப்போதும் ஆல்ப்ஸ் மலையில் புதையல் தேடி அலைந்து கொண்டே இருக்கிறது.

இயேசு கிறிஸ்து இறுதியாக திராட்சை ரசம் குடித்த கோப்பை ஒன்று ஐஸ்லாந்தில் இருப்பதாக கூறுகிறார்கள். திஹோலி கிரெயில் என்று அழைக்கப்படும் இந்த கோப்பை பூமிக்கு அடியில் 15 அடி ஆழத்தில் ஒரு இரகசிய அறையில் இருப்பதாக கதைகள் உலவுகின்றன. கோப்பை இருக்கிறதா? இல்லையா? என்று மக்கள் கூட்டம் ஐஸ்லாந்து பகுதியில் பூமியை தோண்டிக்கொண்டே இருக்கிறது. இப்படி விடை கிடைக்காத இரகசியங்கள், அதிசயங்கள் பூமியில் நிறைய இருக்கின்றன.

திருவள்ளுவருக்கு மைலாப்பூரில் கோயில்

திருவள்ளுவருக்கு மைலாப்பூரில் கோயில் (பிறந்த இடம்) இருப்பதை தற்செயலாகக் கண்டேன். இது மைலாப்பூரில் உள்ள கச்சேரி தெருவிலிருந்து பிரியும், முண்டகண்ணியம்மன் ஆலய தெரு வழியாக சென்றால், அதன் தொடர்ச்சியாகத் திருவள்ளுவர் தெருவில் உள்ளது. இதுதான் திருவள்ளுவர் பிறந்த இடம் என்று அங்கே உள்ளவர்கள் கூறுகின்றனர். அங்கே திருவள்ளுவருக்கு சன்னதியும் அதில் கற்சிலையும் உள்ளது.



ஒரு சிறிய மண்டபத்
தில் மேடை ஓன்று உள்ளது. இது தான் திருவள்ளுவர் அவதரித்த இடம் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. அந்த மேடை மீது கருங்கல்லில்லான இரு பாதங்கள் இருக்கின்றன. இதே போன்ற அடையாளத்தை (கருங்கல்லில்லான இரு பாதங்கள் ) நாகபட்டினத்திர்க்கும் வேளாங்கண்ணிக்கும் இடையில் உள்ள, கோர்கக்கர் சித்தர் ஆலயத்தில் உள்ள சித்தர் அவர்களின் சீவ சமாதி மீதும் உள்ளன, இந்த அடையாளங்கள் (பாதங்கள்) ஆய்வு செய்ய வேண்டிய ஒன்றாக என் மனதுக்குப்படுகிறது. தமிழரது பெருமையை உலகமெல்லாம் பரவ காரணமான திருவள்ளுவர் அவர்களை நினைக்கையில் பூரிப்பாக உள்ளது .

Tuesday, September 4, 2012

இது கதையா, இல்லை உண்மையாவென்று தெரியவில்லை.


இது கதையா, இல்லை உண்மையாவென்று தெரியவில்லை.

கிழக்கு ஆசிய நாடுகளில், ஒருவிதமான பூச்சியை பிடித்து, ஒரு கண்ணாடி பெட்டியினுள் அடைத்து மூடிவிடுவார்கள். அந்த கண்ணாடி யில் சிறிய துவாரங்கள், சுவாசிப்பதற்காக இருக்கும்.

அந்த பூச்சியானது, மேலே நோக்க
ிப் பறந்து, வெளியே போக முயற்சி பண்ணும். மேலே உள்ள கண்ணாடியில் இடித்து, “ஆ! அம்மா !! வலிக்கு தே, இனி மேலே நோக்கிப் போகும் போது பார்த்து போகனும் ” என்று தீர்மானித்துக் கொள்ளும். அதேபோல, இடது புறம் உள்ள கண்ணாடி வழியாக, வெளியே செல்ல முயற்சிக்கும். அதே அடி. அதே வலி. அதே தீர்மானம். இப்படியாக எல்லா திசைகளிலும், பறந்து, வெளியே செல்ல முயன்று, இறுதியாக ஒரு முடிவுக்கு வந்துவிடும்.

சரி, இதுதான் நமது விதி. இந்த கூண்டுக்குள் தான் இனி நம் வாழ்நாளை கழிக்க வேண்டும் போல இருக்கு. இனியும் முயற்சி செய்து பலன் இல்லை. ஆக, இந்த கூண்டுக்குள், நாம் எப்படி சந்தோஷமாக, நிம்மதி யாக இருக்கலாம் என்று எண்ணத் தொடங்கிவிடும். அதோடு கூண்டை தாண்டி வெளியே செல்லும் முயற்சியை கைவிட்டு விடும். இப்போது மேலே நோக்கி பறக்கும். சரியாக ஒரு இன்ச் தூரத்தில், பிரேக் போட்டது போல் நின்று விடும். இந்த தடவை, கண்ணாடியில் இடி இல்லை அதனால் வலி இல்லை. அதே போல், இடது பக்கம் பறக்கும். ஒரு இன்ச் தூரத்தில் நின்று விடும். அனைத்து பக்கங்களிலும் பறக்கும். எந்தக் கண்ணாடியிலும் இடிக்காமல் பறக்கும். அந்த திறமையை, வாழ்க்கை அளித்த பாடம் என்று பெருமையாக எண்ணிக் கொள்ளும்.




இப்படி, அந்த பூச்சி, எந்த பக்கத்திலும் இடிக்காமல் பறப்பதை பார்த்த வுடன், அவர்கள், மேலே உள்ள கண்ணாடி, மற்றும் பக்கங்களில் உள்ள கண்ணாடியை எடுத்து விடுவார்கள். இப்போது, மேலே கண்ணாடி இல்லை. பக்கங்களில் கண்ணாடி இல்லை. ஆனால், அந்த பூச்சி, ஆனந்தமாக, இன்னும் அந்த ஒரு இன்ச் தூரத்தில் பிரேக் போட்டு நின்று, இல்லாத கண்ணாடிகளில் இடிக்காமல், அந்த வேலி இல்லாத பெட்டிக் குள், தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

அந்த பூச்சி மட்டும், பழைய வலியை மறந்து, கொஞ்சம் புது முயற்சி செய்து இருந்தால்… அந்த ஒரு இன்ச் தூரத்தை கடந்து இருக்கும்.ஒரு இன்ச் தூரத்தைக் கடந்து இருந்தால், இந்த உலகத்தையே சுற்றி வந்து இருக்கும்.


நம்மில் பலர், இந்த பூச்சியை போன்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
முயற்சி செய்வதை கைவிட்டு விடுவது உண்டு.
இல்லாத வேலியினுல், எதிலும் இடிக்காமல், வீணாக எந்த புது முயற்சி யிலும் ஈடுபடமால், இது தான் விதி என்று பலர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.

நாம், அந்த ஒரு இன்ச் தூரத்தை தாண்டி விட்டால்…வாழ்க்கையில் நாம் சாதனை புரிய …வானமே எல்லை....

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார், முயற்சி திருவினையாக்கும் முயற்சியின்மை இன்மை புகுத்திவிடும்.. வாழ்வில் வெற்றி பெற நமக்கு அமைத்துக் கொண்ட வேலிகளைத்தாண்டி முயற்சிகள் செய்வோம்.. வாழ்வில் வெற்றி பெறுவோம்.

“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”



நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.
“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

“ஆம் மன்னா!”

“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.

அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னரயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.

ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??”

“இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.

“தொடரும்” என்றார் மன்னர்.

“மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.

“சரி அடுத்து”

“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்”

“களிப்படைதோம் அமைச்சரே! களிப்படைதோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”

“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”

மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார்.

நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.

ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர்.

“சரி எங்கே முதலாவது முட்டாள்?”

அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு ஃபேஸ்புக்கே குடியேன் வாழ்ந்து இந்த மொக்கையான கதைக்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக் படித்துகொண்டிருக்கிறாரே இவர்தான் அந்த முதல் முட்டாள்!”

#ஆத்தீ , கடைசியில் நம்மளையே முட்டாளாக்கிட்டாங்களே:-)))

Monday, September 3, 2012

இதிலிருந்து நீங்கள் கற்கும் நீதி " எப்போவும் அலர்ட் ஆறுமுகமா இரு"...:-)

ஒரு மருத்துவ வகுப்பின் முதல் நாள் ஆசிரியர் ஒரு பிணத்தை வைத்து பாடம் நடத்த ஆரம்பித்தார்
"ஒரு மருத்துவனுக்கு மிக முக்கியமானது மூன்று விஷயங்கள் ஒன்று நோயாளியின் உடலை தொடவோ, பார்க்கவோ கூச்சப்படக்கூடாது அடுத்தது எதையும் நன்றாக கவனிக்க வேண்டும்"
என்று சொல்லிவிட்டு தன் விரலை பிணத்தின் வாய்க்குள் விட்டு பின் வெளியே எடுத்து விரலை முத்தமிட்டார்.பிறகு மாணவர்களிடம்,"சரி எல்லோரும் நான் செய்தது போல செய்யுங்கள்"
என்றார்.







மாணவர்கள் மிகவும் தயங்கினர் ஆனால் நேரம் ஆக ஆக எல்லோரும் செய்ய ஆரம்பித்தார்கள்.
ஒரு கட்டத்தில் எல்லோரும் செய்து முடித்திருக்க ஆசிரியர்,

"எல்லோரும் முடித்தாயிற்றா? நான் பிணத்தின் வாய்க்குள் விட்டது ஆள் காட்டி விரல், முத்தமிட்டது நடு விரல்....இனியாவது நன்றாக கவனியுங்கள்"

இதிலிருந்து நீங்கள் கற்கும் நீதி " எப்போவும் அலர்ட் ஆறுமுகமா இரு"...:-)

enna koduma sir ithu


ஏ.டி.எம்மில் வெளியே வந்த பணம் இனி உள்ளே செல்லாது:

ஏ.டி.எம்மில் வெளியே வந்த பணத்தை குறிப்பிட நேரத்திற்குள் எடுக்காவிட்டால் வெளியே வந்த பணம் திரும்பி உள்ளே செல்லும் முறையை ரிசெர்வ் பேங்க் கடந்த வாரம் முதல் தடை செய்துள்ளது.



தடைக்கு காரணம் என
்ன?..

சிலர் வெளியே வந்த பணத்தில் ஒரு பகுதியை எடுத்துவிட்டு சிறிது நேரத்தில் மீதியை ஏ.டி.எம்மில் வைத்தால் ஏ.டி.எம் திருப்பி எடுத்துக்கொள்ளும் பிறகு அந்த நபர் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று வெளியே வந்த பணத்தை தான் எடுக்க வில்லை ஆனால் பணம் ஏ.டி.எம் உள்ளே சென்று விட்டது என்று பொய்யான தகவல்களை தந்து ஏமாற்றியதாலும், இதனால் பல குழப்பங்கள் தொடர்ந்த வன்னம் இருந்துவந்ததாலும் இந்த தடை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஏ.டி.எம் காவலாளிகள் கூறுவதாவது. "இதனால் நிறைய தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. யாரவது வெளியே வந்த பணத்தை எடுக்க மறந்து சென்று விட்டால் அவருக்கு பின் பணம் எடுக்க வந்தவர்கள் பணத்தை எடுத்துக்கொள்ளும் வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கிறது...இதுவரை நாங்கள் பணம் எடுக்க வருபவர்களிடம் அவர்களுடைய உடமைகளை பத்திரமாக மறக்காமல் எடுத்துசெல்லுமாறு அறிவுறுத்துவோம்.. ஆனால் இனி பணத்தையும் சேர்த்து மறக்காமல் எடுத்து செல்லுமாறு சொல்லவேண்டும்..." என்று கூறுகின்றனர்.

இனி நீங்க ஏ.டி.எம்மில் பணம் எடுக்கும் போது அலேர்டா இருக்கணும்!...
அன்பான தமிழ் மக்களே இனி நீங்கள் மிகவும் விழிப்புடன், மறவாமல் ஏ.டி.எம்மில் இருந்து பணத்தை முழுவதுமாக எடுத்த பிறகே அந்த இடத்தை விட்டு நகர வேண்டுமாறு கேட்டுகொள்கிறேன்..


கருணாநிதிக்கு கண்ணதாசனின் கவிதைப் பதில்...


கருணாநிதிக்கு கண்ணதாசனின் கவிதைப் பதில்...

30 வருடங்களுக்கு முன்னால் கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி கேட்டதற்கு கண்ணதாசனின் கவிதையை பாருங்கள்...

அஞ்சாதா சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து
தன்சாதி தன்குடும்பம் தான்வாழ‌ தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பண்புடையான் கவிஞ‌னெனில்
நானோ கவிஞ‌னில்லை
என்பாட்டும் கவிதையல்ல‌.



பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்றி
நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய‌ கதையுரைத்து
வகுத்துண‌ரும் வழியறியா
மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
பேதையனே கவிஞ‌னெனில்
நானோ கவிஞ‌னில்லை

Saturday, September 1, 2012

வறுமை உடலை கொத்த நின்ற கழுகு!!

வறுமை உடலை கொத்த நின்ற கழுகு!!







1994-ம் ஆண்டு சூடானின் கடுமையான வறுமையில் மக்கள் பட்டினியால் மடிந்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 'சாக இருந்த குழந்தையை கொத்திச் சென்றிட காத்திருக்கும் கழுகை' ஒரு புகைப்படம் எடுத்தார் கெவின் கார்டர் என்னு
ம் புகைப்படக்காரர். இன்றும் வறுமை என்றால் இப்படத்தை தான் உதாரணம் காட்டுவார்கள். புகைப்படம் எடுத்த நேரம் பசியில் தவித்த குழந்தையை காப்பாற்றி இருக்கலாமே' என்ற சர்ச்சை எழ, பின்னாளில் குற்ற உணர்வால் கெவின் கார்டர் தற்கொலை செய்து கொண்டார்.





நன்றி - MANOJ SELVARAJ

ஆப்கானை தகர்க்கும் அமெரிக்க உடைப்பு !

ஆப்கானை தகர்க்கும் அமெரிக்க உடைப்பு !



செப்டம்பர் 11,2001 சர்வதேச தீவிரவாதத்தின் மீதான பார்வை உக்கிரமான நாள். அன்று தான் உலக வர்த்தக மையமாக கருதப்படும் 'ட்வின் டவர்ஸ்' மீது அல்கொய்தா இயக்கம் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. அது அமெரிக்க
ாவின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்துவிட்டது என்றே சொல்லலாம். அடுத்த சில நாட்களுக்கு அந்த புகைப்படமே உலக ஏடுகளின் பக்கங்களை ஆக்கிரமித்தன. அன்று ஆடிப்போன அமெரிக்கா, பின்லேடனை கொன்றதோடு, இன்று வரை ஆப்கானையும் அம்மக்களையும் மெல்ல மெல்ல தகர்த்து கொண்டிருக்கிறது.

வணிக நிறுவனங்களுக்கு தூய தமிழ் பெயர்கள்!!!

Tailors - தையலகம்
Textiles - துணியகம்
Readymades - ஆயத்த ஆடையகம்
Cinema Theatre - திரையகம்
Video Centre - ஒளிநாடா மையம், விற்பனையகம்
Photo Studio - புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்
Chit Fund - நிதியகம்
Bank - வைப்பகம்
Laundry - வெளுப்பகம்
Dry Cleaners - உலர் வெளுப்பகம்
Agro Centre - வேளாண் நடுவம்
Agro Service - உழவுப் பணி
Air Conditioner - குளிர் பதனி, சீர்வளி
Arts - கலையகம், கலைக்கூடம்
Asbestos - கல்நார்
Audio Centre - ஒலியகம், ஒலிநாடா மையம்
Auto - தானி
Automobiles - தானியங்கிகள், தானியங்கியகம்
Auto Service - தானிப் பணியகம்
Bakery - அடுமனை
Battery Service - மின்கலப் பணியகம்
Bazaar - கடைத்தெரு, அங்காடி
Beauty Parlor - அழகு நிலையம், எழில் புனையகம்
Beda Stall - மடி வெற்றிலைக் கடை
Benefit Fund - நலநிதி

மொபைல் போனை தூக்கி போடுங்கள் ! நலத்தை கெடுக்கும் ரேடியேஷன் அபாயம்!

மொபைல் போனை தூக்கி போடுங்கள் !
நலத்தை கெடுக்கும் ரேடியேஷன் அபாயம்!

மொபைல் போன் தரும் தீமைகள் குறித்து மத்திய அரசே எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் மொபைல்போன் பயன்பாடு மற்றும் ரேடியேஷனில் இருந்து தப்பிக்க வழி கூறி
யிருக்கிறது. இதன் விவரம் வருமாறு :

மூக்கு கண்ணாடி அணிபவரா நீங்கள் ?





* முதலில் நீங்கள் மொபைல் பேசாமல் இருந்தால் அலுவலகத்தில் இருக்கும் போது தங்கள் உடலுடன் ஒட்டிய படி இல்லாமல் சற்று தள்ளி அதாவது மேஜை மீது வைப்பது நல்லது.
* போன் பேசும்போது ஸ்பீக்கர் போன் ஆன் செய்தோ அல்லது ஹெட்செட் மூலமோ பேசிக்கொள்வது நல்லது. லேண்ட்லைன் போனாக இருந்தாலும் இது பொருந்தும். * நீண்டநேர அழைப்பை தவிர்ப்பதுடன் இதற்கு பதில் எஸ்.எம்.எஸ்., பகிர்ந்து கொள்ளவும்.
* நீங்கள் மூக்கு கண்ணாடி அணிபவராக இருந்தால் அதில் மெட்டல் பிரேம் இல்லாமல் பார்த்து கொள்ளவும். பேசும் போது இதனை தவிர்ப்பது நல்லது.
* குளித்த நிலையில் ஈரத்தலையுடன் போன் பேசுவதை தவிர்க்கவும், காரணம் மெட்டல் மற்றும் தண்ணீர் இரண்டுக்கும் ரேடியேஷன் சக்தியை இழுக்கும் அதிகம் சக்தி கொண்டது. இதனை தவிர்ப்பதன் மூலம கெடுதலில் இருந்து தப்பிக்கலாம்.
*பேசாமல் இருக்கும்போது போன் உபகரணத்தை தனது உடலின்மீது படும்படியே அல்லது பேண்ட் பாக்கெட்டிலே வைப்பதை தவிர்க்கலாம். காரணம் இந்த போன் ஒன்று அல்லது 2 நிமிடத்திற்கொருமுறை இது தனக்கான சமிக்ஞைகளை பெறுவதில் கூடுதல் சக்தியை வெளிப்படுத்தி கொண்டேயிருக்கும்.

* போன் பேசும் போது ரேடியோ சிக்னல் வீக்காக இருந்தால் பேசாமல் இருப்பது நல்லது, காரணம் இந்நேரத்தில் இந்த போன்கள் தனது சிக்னலை பெறுவதற்கும் ஒளிபரப்பு தன்மையை அதிகரிக்கவும் கூடுதல் செயல்பாட்டில் இருக்கும். மொத்தத்தில் போன் பேசுவதை குறைத்து எச்சரிக்கையாக வாழ்வது நல்லது.

காக்கை , குருவிகள் மடிந்தன:

இன்றைய உலகில் வானில் பறவைகளையே காண முடியவில்லை. இந்த மொபைல் டவர் வெளியிடும் கண்ணுக்கு தெரியாத அலைகள் பல்வேறு பறவைகளை அழித்து வருகிறது. சிட்டுக்குருவி முழுமையாக முடிந்து போனது. காகத்திற்கு சோறு போட வேண்டுமானால் பல மணி நேரம் மொட்டை மாடியில் காத்திருக்க வேண்டியதாக இருக்கிறது. கா, கா என்று அழைத்தாலும் வர மறுக்கிறது. காரணம் எண்ணிக்கை வீழ்ச்சியில் இருக்கிறது என்பதே ! கூரையில் சோறு போட்டால் ஆயிரம் காக்கை என்ற பழமொழி எல்லாம் மறந்து விட வேண்டியதுதான். காக்கை , குருவிகள் கழுகு, பருந்து உள்ளிட்டவை அழிந்து வரும் நிலையிலல், மனிதர்கள் இதனை விட கூடுதல் பலம் இருப்பதால் அதிக கெடுதல் விரைவில் தாக்காமல் இருக்கிறது என்பதுதான் உண்மை ! நீங்கள் இனி எப்படி மொபைல் போன் பேசப்போகிறீர்கள் ?


சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?

சமணர் மலை மதுரைக்கு அருகே தேனி செல்லும் வழியில் அமைந்துள்ள ஒரு கல்குன்று ஆகும். இது கீழக்குயில்குடி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. கி.பி. எட்டாம் நூற்றாண்டுவாக்கில் இங்குள்ள குகைகளில் சமண முனிவர்கள் வாழ்ந்ததாக இங்குள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இங்கு கல்வெட்டுக்களுடன் சமண படுகைகளும் காணப்படுகின்றன.

சமண மதம் ஒரு காலத்தில் பெரும் செல்வாக்கோடு விளங்கியது. சமண அறிஞர்கள் பலர் தமிழுக்கு தொண்டாற்றி இருக்கிறார்கள். கீழக்குயில்குடி சமண மலையிலும் சமணர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். சமணர்கள் வருகைக்கு முன் இந்த மலை திருவுருகம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு பாண்டிய மன்னர்களின் ஆதரவோடு சமண சமயம் செழித்திருந்தது. மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்பது போல் மன்னர்களின் ஆதரவு பெற்ற சமணர்களுக்கு, மக்களும், செல்வாக்கு மிக்கவர்களும் உதவினார்கள். உறைவிடம் அமைத்துக் கொடுத்தார்கள். 

சமணத்துறவிகளின் வசிப்பிடம் மலைக்குகைகள் தான். மழைக்காலங்களில் குகைகளில் தங்கிக் கொள்வார்கள். கோடை காலத்தில் மலையை விட்டு இறங்கி மக்களுக்கு சேவை செய்வார்கள். இவர்கள் முக்காலமும் உணர்ந்தவர்கள். மருத்துவம், ஜோதிடம் தெரிந்தவர்கள். அதனால் மக்களின் மதிப்பை பெற்றவர்களாகவே சமணர்கள் இருந்தார்கள்.


நாம் விரும்பி உண்ணும் சாக்லேட் உருவாக்கத்தின் மறுபக்கம்!

நாம் விரும்பி உண்ணும் சாக்லேட் உருவாக்கத்தின் மறுபக்கம்!

படிக்க வேண்டிய சிறுவர்கள் வறுமை காரணமாக ஆப்பிரிக்க கொக்கோ தோட்டங்களில் மிகக்குறைந்த ஊதியத்திற்கு வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதில் ஒரு சிறுவனைப்பாருங்கள்... கொக்கோ மூட்டையை கஷ்டப்பட்டு தூக்கும் காட்ச்சி நெருடலாக இருக்கும்.இவர்களில் பலர் தயாரான சாக்லேட்டை சாப்பிட்டதே இல்லையாம்!


How is it???

How is it???