நான் கல்லூரி முடித்து வீடு வந்துருந்த நேரம் அது..
சாப்டியா என்றபடி என் அன்னை தட்டில் சோறோடு வந்தாள்..
அச்சமயம் தொலைக்காட்சியில் எதை பார்பது என்று ரீமோட்டிடம் அலோசித்துக் கொண்டிருந்தேன்..
பிரபாகரனின் மகன் பற்றிய குரும்படம் பற்றியது புதிய தலைமுறை சேனலில் ஓடிக்கொண்டிருந்த்து..
கல்லூரி செல்லும் அவசரத்தில் அந்த பச்சிலம் முகத்தை மட்டுமே பார்தேன்
ஆனால் என்னாச்சு என்று ஆவாலோடு இப்பொழுது பார்த்துக்கொண்டிருந்தேன்
சாப்டியா என்றபடி என் அன்னை தட்டில் சோறோடு வந்தாள்..
“டேய் வேர திருப்புடா’’ என்ற சொன்னவுடன் என் நினைவு திருப்பினால் என் அன்னை..
இருமா என்றபடி பார்தேன்..
ஒருமாரி இருக்கு திருப்புடா என்றால்..
ஏனோ அதை பார்த்துக்கொண்டிருந்தேன்..
ஏங்கோ ஒரு மூலையில் கிடக்கும் இறந்த பிணங்கலையே என் அன்னைக்கு பார்க்க முடியவில்லை (என்னாலையும் தான்)
கண் முன்னால் எத்தனை பேர் தன் அன்னையை இழந்திருப்பார்
எத்தனை தாய் தன் மகனை கண் முன்னால் இழந்திருப்பர்
நினைக்கையில் அதன் நினைவோடு பிரபாகரனின் மகன் இறந்த பட்த்தை பார்கையில் கண் கழங்கிற்று..
அந்த கண்ணீருக்கு காரணம் நான் தமிழனோ அல்லது இந்தியனோ அல்ல..
நான் மனம் கொண்ட மனிதன் மட்டுமே..
என்னைப் போல் இப்படி சவமாய் கிடப்பதை பார்க்க முடியவில்லை..
இதில் நான் வேண்டிக்கொள்வது போர்கள் வேண்டாம் என்பதே
உலக அமைதியின் முக்கியம் மட்டுமே...
No comments:
Post a Comment