சமணர் மலை மதுரைக்கு அருகே தேனி செல்லும் வழியில் அமைந்துள்ள ஒரு கல்குன்று ஆகும். இது கீழக்குயில்குடி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. கி.பி. எட்டாம் நூற்றாண்டுவாக்கில் இங்குள்ள குகைகளில் சமண முனிவர்கள் வாழ்ந்ததாக இங்குள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இங்கு கல்வெட்டுக்களுடன் சமண படுகைகளும் காணப்படுகின்றன.
சமண மதம் ஒரு காலத்தில் பெரும் செல்வாக்கோடு விளங்கியது. சமண அறிஞர்கள் பலர் தமிழுக்கு தொண்டாற்றி இருக்கிறார்கள். கீழக்குயில்குடி சமண மலையிலும் சமணர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். சமணர்கள் வருகைக்கு முன் இந்த மலை திருவுருகம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு பாண்டிய மன்னர்களின் ஆதரவோடு சமண சமயம் செழித்திருந்தது. மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்பது போல் மன்னர்களின் ஆதரவு பெற்ற சமணர்களுக்கு, மக்களும், செல்வாக்கு மிக்கவர்களும் உதவினார்கள். உறைவிடம் அமைத்துக் கொடுத்தார்கள்.
சமணத்துறவிகளின் வசிப்பிடம் மலைக்குகைகள் தான். மழைக்காலங்களில் குகைகளில் தங்கிக் கொள்வார்கள். கோடை காலத்தில் மலையை விட்டு இறங்கி மக்களுக்கு சேவை செய்வார்கள். இவர்கள் முக்காலமும் உணர்ந்தவர்கள். மருத்துவம், ஜோதிடம் தெரிந்தவர்கள். அதனால் மக்களின் மதிப்பை பெற்றவர்களாகவே சமணர்கள் இருந்தார்கள்.

No comments:
Post a Comment