Friday, August 31, 2012

-சச்சின் டெண்டுல்கர்(கிரிக்கெட் வீரர்)

'கிரிக்கெட்டில் நூறு சதங்கள் அடிப்பதைவிட, உலககோப்பை வெல்வதே எனது கனவாக இருந்தது. அதை அடைய நான் 22 வருடங்கள் காத்திருந்தேன். ஒருவர் தனது கனவை தொடர்ந்து துரத்தினால் நிச்சயம் ஒருநாள் அது மெய்யாகும்'
-சச்சின் டெண்டுல்கர்(கிரிக்கெட் வீரர்)
நடப்புக் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது காலாண்டுத் தேர்வு செப்.12-ம் தேதி தொடங்கும் என தமிழக அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

இந்தக் கல்வி ஆண்டு முதல் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் தமிழகம் முழுவதும் ஒரே தேதியில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் காலாண்டுத் தேர்வுக்கு வழங்கப்பட உள்ளது இதுதான் முதல்முறையாகும். ஒரே வினாத்தாள் தயாரிக்கப்படுவதால் வினாக்கள் தரமுள்ளதாக அமையும் என்பது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் பாடத் திட்டப்படி ஒரே மாதிரியான வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என கல்வித் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு முழு ஆண்டுத் தேர்வை போலவே காலாண்டுத் தேர்வுக்கும், அரையாண்டுத் தேர்வுக்கும் வினாத்தாளை படித்துப் பார்க்க 10 நிமிஷமும், தேர்வு எண் உள்ளிட்ட விவரங்களை எழுத 5 நிமிஷமும் வழங்கப்படவுள்ளது. இதனால் தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும்.

பிளஸ் 2 தேர்வுகள் செப்.25-ம் தேதி வரையும், 10-ம் வகுப்புத் தேர்வுகள் செப்.20-ம் தேதி வரையும் நடைபெறவுள்ளன.
இலங்கையிலிருந்து சென்னைக்கு கடத்த முயன்ற ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கொழும்புவிலிருந்து இன்று காலை ஏர்இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்த ரூபராஜன், விஜிந்தா ஆகிய இரு பயணிகளும் தங்களிடம் சுங்க தீர்வை கட்டுவதற்கான பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறினர். இருந்தாலும் சுங்க இலாகா அதிகாரிகளுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

தீவிரமாக சோதனை செய்ததில் அவர்கள் இடுப்பில் அணிந்திருந்த பெல்ட்டில் தங்க நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும். இதனைத் தொடர்ந்து அந்த தங்க நகைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர்கள் பலமுறை கொழும்புக்கும் சென்னைக்கும் இடையே பயணம் செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இலங்கையை விட இங்கு தங்கத்தின் விலை கூடுதலாக இருப்பதால் அவர்கள் இது போல கடத்தி வந்து விற்பனை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆணையர்களை தேர்வு செய்வதற்கான நியமனக்குழு இன்று கூடியது. குழுவின் தலைவரான முதல் அமைச்சர் ஜெயலலிதா, நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இதில் பங்கேற்றனர். குழுவின் உறுப்பினரான எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இக்கூட்டத்தில், மாநில தகவல் ஆணையர்கள் பதவிக்கு யார் யாரை நியமிக்கலாம் என விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் முடிவில் 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களை தகவல் ஆணையர்களாக நியமிக்க வேண்டும் என்று கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்தை எப்படியாவது செயல்பட விடக்கூடாது என நினைத்தவர்களுக்கு பேரிடியாக சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் அணுமின்நிலையம் விரைவில் தனது உற்பத்தியை துவக்குவதுடன் தற்போது ஏற்பட்டு வரும் மின் பற்றாக்குறை விரைவில் தீரும் என பலர் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கின்றனர்.


பல ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட்ட அணுமின்நிலையம் செயல்பட துவங்கும் நேரத்தில் இங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீனவ மக்களிடம் பீதியை கிளப்பி விட்டு அரசுக்கு எதிரான போராட்டத்தை தூண்டி விட்டனர். கூடங்குளம் , இடிந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் பதட்டம் தொற்றிக்கொண்டது. போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் மத்திய, மாநில அரசு சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு மக்களிடம் விசாரிக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டன. இந்த அறிக்கையின்படி அணு மின் நிலையத்தை துவக்கலாம், பாதுகாப்பு விஷயத்தில் அச்சப்படத்தேவையில்லை என தெளிவு படுத்தப்பட்டது.


முதலில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்த மாநில அரசு தரப்பிலும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தொடர்ந்து கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இதனையடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் என்.ஓ.சி., என்ற சான்றை வழங்கி விட்டது. இப்போதாவது இந்த அணு உலையை தடுக்க வேண்டும் என்று கங்கணத்தோடு ஒரு பிரிவினர் சென்னை ஐ கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்தனர், இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் போதிய பாதுகாப்பு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளதாக திருப்தி தெரிவித்தனர். அணு உலை பிரிவு- 1 மற்றும் பிரிவு 2 செயல்படலாம். இதற்கு எதிரான அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.